சரக்கு வாகனம் மோதி கட்டிட தொழிலாளி பலி
அடையாளம் தெரியாத வாகனம் மோதி கட்டிட தொழிலாளி பலி - போலீசார் விசாரணை;
By : King 24x7 Website
Update: 2024-01-02 17:03 GMT
அடையாளம் தெரியாத வாகனம் மோதி கட்டிட தொழிலாளி பலி - போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம், இலங்கினி வயலை சேர்ந்தவர் சரவணன். கட்டிட தொழிலாளியான இவர் தேவகோட்டையில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சிறுவாச்சி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத சரக்கு வாகனம் அவர் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஆறாவயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்