தீபக் ராஜன் கொலை வழக்கு - விசாரணையில் வெளியான தகவல்

தூத்துக்குடி மாவட்டம் பக்கப்பட்டியை சேர்ந்த வடிவேல் முருகனின் கொலைக்கு பழிக்கு பழியாக தீபக் ராஜன் கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Update: 2024-05-26 06:18 GMT

தீபக் ராஜன் 

நெல்லை மாநகர கேடிசி நகரில் கடந்த 20ஆம் தேதி பசுபதி பாண்டியன் ஆதரவாளர் தீபக் ராஜா கூலிப்படையினரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் பக்கப்பட்டியை சேர்ந்த வடிவேல் முருகன் கொலைக்கு பழிக்கு பலியாக தீபக் ராஜனை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News