ஜெபக்கூடம் நடத்த அனுமதி மறுப்பு: சபை மக்கள் திடீர் கைது

திருவட்டார் அருகே அனுமதியின்றி ஜெபக்கூட்டம் நடத்த முயன்றதாக கூறி சபை மக்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-03-21 13:09 GMT

போலீசார்

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே பேச்சிப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரத்தில் ஒரு பெந்தேகொஸ்தே கிறிஸ்துவ சபை செயல்பட்டு வருகிறது.இந்த சபைக்கு சொந்தமான இடம் பொன்னியாகுளம் அருகில் உள்ளது.

அந்த பகுதியில் ஜெபக் கூட்டம் நடத்த குலசேகரம் போலிசாரிடம் அனுமதி கோரினார் போலிசார் அனுமதி வழங்கவில்லை அந்த பகுதியில் ஜெபக் கூட்டம் நடத்த கூடாது என்று மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் அந்த பகுதியில் பரப்பரப்பானது.அந்த பகுதியில் ஜெபக்கூட்டம் நடத்த வேண்டிய முன்னேற்பாடுகளை சபை நிர்வாகிகள் மேற்கொண்டு வந்தனர்.

இதை அறிந்த குலசேகரம் போலிசார் அந்த பணியில் ஈடுப்பட்ட சபை நிர்வாகிகளை கைது செய்து குலசேகரம் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இந்த தகவல் அறிந்ததும் சபை நிர்வாகிகளுக்கு ஆதரவாக மற்ற சபை நிர்வாகிகள் ஏராளம்மானோர் தனியார் மண்டபத்திற்க்கு வந்து ஜெப கூட்டம் நடத்த அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News