வேலூரில் 1000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழிப்பு

வேலூரில் போலீசார் நடத்திய சோதனையில் 1000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 120 லிட்டர் கள்ளச்சாராயம் , மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

Update: 2024-01-28 12:10 GMT


சாராய ஊரல்கள் அழிப்பு


வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் மதுபாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்சுபவர் விற்பவர் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் கள்ளச்சாராய ஊரல்கள் சுமார் 1000 லிட்டர், கள்ளச்சாராயம் 120 லிட்டர், 47 மது பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது 14 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார் .
Tags:    

Similar News