கல்வராயன் மலைப்பகுதியில் 1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலை பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் 1500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.;
Update: 2024-03-19 04:09 GMT
அழிக்கப்பட்ட சாராய ஊறல்கள்
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா உத்தரவுப்படி கரியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் காவலர்கள் கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது தும்பரம்பட்டு வடக்கு ஓடை அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊறல் 500 லிட்டர் பிடிக்கக்கூடிய 03 பேரல்களில் சுமார் 1,500 லிட்டர் சாராய ஊறல்களை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .