தேவஸ்தான நிர்வாகிகள் ஏ.ஆர். பால் உற்பத்தி நிறுவனம் மீது புகார் !!
By : King 24x7 Angel
Update: 2024-09-26 09:13 GMT
ஏ.ஆர். பால் உற்பத்தி நிறுவனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாத லட்டு தயாரிக்க திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர். பால் உற்பத்தி நிறுவனம் அனுப்பி இருந்த நெய்யில் மீன் எண்ணெய், பன்றி மற்றும் மாட்டு கொழுப்பு உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டது சோதனையில் உறுதி செயயப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவஸ்தான கொள்முதல் பிரிவு பொது மேலாளர் முரளிகிருஷ்ணா அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.