அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம்
நடந்து சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம்;
By : King 24x7 Website
Update: 2023-12-03 16:09 GMT
நடந்து சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம்
கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுக்கா, அப்பிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி வயது 65. டிசம்பர் 1ஆம் தேதி மாலை 6 மணி அளவில் கரூர்- மதுரை சாலையில், அப்பிபாளையம் பகுதியில் உள்ள அஞ்சு டெக்ஸ் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர் திசையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, நடந்து சென்ற சுப்பிரமணியம் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்று விட்டது. இந்த சம்பவத்தில், நிலை தடுமாறி கீழே விழுந்த சுப்பிரமணிக்கு, தலை, வலது கால் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுப்பிரமணியன் மகன் வீரக்குமார் வயது 40 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த அடையாளம் தெரியாத வாகனம் எது? அதன் ஓட்டுனர் யார்? என்ற வியூகத்தில் தாந்தோணிமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்