போலி நகை அடகு வைத்து மோசடி - கேரளா ஆட்டோ ஓட்டுனர் கைது
கொல்லங்கோடு சுற்றுவட்டார பகுதி பைனான்ஸ்களில் போலி நகை அடகு வைத்து மோசடி செய்த கேரளா ஆட்டோ ஓட்டுனர் கைது.
Update: 2024-03-23 02:02 GMT
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நான்கு பைனான்ஸ்களில் போலிநகை அடகு வைத்து பணம் பெற்ற சம்பவம் குறித்து கடந்த் பிப்ரவரி மாதம் கொல்லங்கோடு அருகே 7ம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரித்து, கோழிவிளை பகுதியை சார்ந்த லால் கிங்சிலி என்ற நபரை கைது செய்தனர். விசாரணையில் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலி நகை அடகு வைத்து பணம் பெற்று மோசடியில் ஈடு பட்டது தெரிய வந்தது.இது சம்பந் தமாக கொல் லங் கோடு போலீசார் கேரள மாநிலம் பீமாபள்ளி சுற் றுவட்டார பகு தியை சார்ந்த ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் குமரி மாவட்ட தனிப்படை போலீசார் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பீமா பள்ளி அருகே பூந்துறை ஆசாத் நகர் பகுதியை சார்ந்த அல்அமீன் என்ற ஆட்டோ ஓட்டுநரை பிடித்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து கொல்லங்கோடு போலீசார் அல்அமீனை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை தேடி வருகின்றனர்.