குடும்பத் தகராறு வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை
மதுரைவீரன் தெருவில் குடும்பத்த தகராறு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்;
By : King 24x7 Website
Update: 2023-12-03 15:26 GMT
மதுரைவீரன் தெருவில் குடும்பத்த தகராறு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
மல்லசமுத்திரம் மதுரை வீரன்தெருவில் குடும்பத்தகராறில் வாலிபர் கிணற்றில் குதித்து விபரீத முடிவு செய்து கொண்டார். மல்லசமுத்திரம் மதுரைவீரன்தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபு29. சென்டரிங் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி அர்ச்சனா26. இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டு, நேற்று மாலை 6.30மணியளவில், அவரது வீட்டின் அருகே இருந்த பொதுகிணற்றில் குதித்து உயிரிழந்தார். ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பிரபுவின் உடலை மீட்டனர். மல்லசமுத்திரம் போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.