விழுப்புரத்தில் நெல்அறுக்கும் இயந்திரம் மோதி விவசாயி பலி
விழுப்புரம் அருகே பில்லூர் கிராமத்தில் நெல் அறுக்கும் இயந்திரம் மோதி விவசாயி பலியானார்.
விழுப்புரம் அருகே பில்லூர் கிராமத்தில் நெல் அறுக்கும் இயந்திரம் மோதி விவசாயி பலியானார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா, புதுப்பேட்டை அருகே உள்ள அவியனூர் கிராமம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் தண்டபாணி(59). இவர் விவசாய ஆவார்.
இவர் சொந்த வேலைக்காக விழுப்புரத்தில் சென்று பில்லூர் உறவினர் வீட்டுக்குச் செல்லும் பொழுது, பில்லூர் ரயில்வே நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த நெல் அறுவடை இயந்திரம் இவர் மீது மோதி பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவத்தை அறிந்த விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.