மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தந்தை - போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு
சேலத்தில் 17 வயது மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தந்தை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு;
By : King 24x7 Website
Update: 2023-12-03 13:34 GMT
சேலத்தில் 17 வயது மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தந்தை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு
சேலம் சீலநாயக்கன்பட்டியில் 17 வயது மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தந்தையின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் சீலநாயக்கன்பட்டி அழகு நரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (43) கூலி தொழிலாளி இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் காதல் திருமணம் செய்து கொண்டு தனியாக சென்று விட்டார். 17 வயது கொண்ட இரண்டாவது மகள் நெத்திமேடு பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற 17 வயது சிறுமி தனது ஆசிரியரிடம் தனது தந்தை வெங்கடேசன் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுகிறார் என கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் நேரடியாக மாணவியிடம் தனியாக விசாரணை நடத்தினார். அதில் வீட்டில் தந்தை செய்யும் பாலியல் சேட்டைகளை மாணவி தெரிவித்துள்ளார். இதை அடுத்து மாணவியின் புகாரின் பேரில் தந்தை வெங்கடேசனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து வெங்கடேசனை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.