பிரசவத்தின் போது உயிரிழந்த பெண் டாக்டர் - போலீசார் விசாரணை !

Update: 2024-12-19 09:51 GMT

பலி

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் அரூர் அருகே சந்திரூர் பகுதியை சேர்ந்தவர் பாத்திமா. டாக்டரான இவர் திருச்சூரில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு எம்.டி. படித்து வந்தார். இவருடைய கணவர் கொல்லம் மாவட்டம் ஓச்சரா பகுதியை சேர்ந்த சனூஜ். இந்தநிலையில் பாத்திமா 2-வது பிரசவத்திற்காக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பிரசவம் நடந்த போது, திடீரென உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாத்திமாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஆனால், பிறந்த குழந்தை நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து எர்ணாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News