நண்பரின் தாயை கத்தியால் குத்தி நகை பறிப்பு - 2 பேர் கைது

சேலம் ஆட்டையாம்பட்டி அருகே மது அருந்துவதற்காக நண்பரின் தாயை கத்தியால் குத்தி நகையை பறித்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-02-16 02:30 GMT

கைது 

சேலம் மணியனூர் பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் மகன் ஷாஜகான் (வயது 22). இதேபோல் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் சிவா (22). இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்துள்ளனர். இந்நிலையில் மற்றொரு நண்பரான அன்னதானப்பட்டியை சேர்ந்த கதிரவன் (19) மற்றும் கல்லூரி நண்பன் சிவா ஆகியோருடன் ஷாஜகான் நாள்தோறும் ஒன்றாக மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் கையில் காசு இல்லாத நிலையில் மது அருந்துவதற்காக சிவாவுக்கு போன் செய்தபோது அவர் வெளியூர் சென்றுள்ளது தெரிய வந்தது. அப்போது சிவாவின் தாயார் தங்க நகை அணிந்திருப்பதால் பணம் எப்போதும் இருக்கும் என எண்ணி இரவு 1 மணிக்கு ஷாஜகானும், கதிரவனும் சிவா வீட்டிற்கு சென்றுள்ளனர்.

Advertisement

அங்கு சிவாவின் தாயார் சசிகலாவிடம் பணம் கேட்டபோது, பணம் இல்லை வெளியே செல்லுங்கள் என அவர் சத்தம் போட்டு உள்ளார். அப்போது அவர்கள் ஏற்கனவே வைத்திருந்த கத்தியால் சசிகலாவை கை, இடுப்பு ஆகிய பகுதிகளில் குத்தி உள்ளனர். சசிகலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வரவே சசிகலா அணிந்திருந்த தங்க நகையை பறித்து கொண்டு அங்கிருந்து 2 பேரும் தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து காயம் அடைந்த சசிகலாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜகான், கதிரவன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News