மாலைக்கோடு பகுதியில் அரசு பேருந்து ஆட்டோ மோதல்: இருவர் படுகாயம்
மாலைக்கோடு பகுதியில் அரசு பேருந்து ஆட்டோ மோதிய விபத்தில் ஓட்டுநர் உட்பட இருவர் படுகாயம் அடைந்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-30 13:38 GMT
விபத்தில் சிக்கிய வாகனங்கள்
மார்த்தாண்டம் செண்பகதரிசு தடம் எண் 85 கே அரசு பஸ் பயணிகளுடன் சென்றுகொண்டு இருந்தது. அருமனை அருகே மாலைக்கோடுபகுதி வழியாக சென்ற போது அவ்வழியாக அருமனை அருகே மலமாரி பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் ஓட்டி வந்த லோடு ஆட்டோ மீது எதிர் பாராத விதமாக மோதி விபத்திற்கு உள்ளானது.
இதில் லோடு ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்த விபத்தில், ஆட்டோ டிரைவர் சுரேஷ்குமார் உட்படஇரண்டு பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அங்கு திரண்ட பொது மக்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த அருமனை போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.