போலிச் சான்றிதழ் மூலம் அரசு பணி - குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு

அஞ்சல் துறை பணிக்கு போலி 10ம் வகுப்பு சான்றிதழை சமர்ப்பித்து பணியில் சேர்ந்த அரக்கோணத்தைச் சேர்ந்த பெண் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Update: 2024-01-24 12:05 GMT

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு அரக்கோணத்தைச் சேர்ந்து லோகேஸ்வரி என்பவர் போலி 10-வது சான்றிதழ் கொடுத்து அஞ்சல் துறையில் பணியில் சேர்ந்ததாக அஞ்சல் துறை மண்டல் அதிகாரி குமார் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் லோகேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையில், பத்தாம் வகுப்பில் 496 மதிப்பெண்கள் பெற்றதாக போலி சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது தெரிந்துள்ளது.

மேலும்,எத்தனை பேர் போலி சான்றிதழ் கொடுத்து அஞ்சல் துறையில் சேர்ந்துள்ளார்கள் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அஞ்சல் துறையில் கிராமின் தக் சேவாக் என்ற பணிகளுக்கு போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News