தேனீக்கள் கொட்டியதால் கணவன் உயிரிழப்பு: மனைவிக்கு தீவிர சிகிச்சை
தேனீக்கள் கொட்டியதால் கணவன் உயிரிழப்பு. படுகாயங்களுடன் மீட்கபட்ட மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;
By : King 24x7 Website
Update: 2023-10-26 08:29 GMT
தீவிர சிகிச்சை
மலையரசன்
நீலகிரி மாவட்டம் மஞ்சூரை அடுத்த சிவசக்தி நகரை சேர்ந்த கூலி தொழிலாளி மலையரசன்(50) அவரது மனைவி ராஜேஸ்வரி(38) இருவரும் எடக்காடு பகுதியில் தோட்ட தொழிலுக்கு சென்றுள்ளனர். தோட்டத்தில் அவர்கள் பணியாற்றி கொண்டிருந்த போது அருகில் இருந்து பறந்து வந்த மலை தேனீக்கள் ராஜேஸ்வரியை கடிக்க தொடங்கி உள்ளன. அதனை கண்ட மலையரசன் மனைவியை காப்பாற்ற முயன்ற போது 50-க்கும் மேற்பட்ட தேனீக்கள் மலைரசனை கடித்தன. அவர்கள் இருவரையும் அருகில் இருந்தோர் மீட்டு மஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்ற போது மலையரசன் உயிரிழந்தார். அவரது மனைவி ராஜேஸ்வரி மேல்சிகிச்சைகாக உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக மஞ்சூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.