மனைவியை கொன்ற கணவன் - 9 ஆண்டுகளுக்கு பின் கைது

நித்திரவிளை அருகே குடிக்க பணம் தர மறுத்த மனைவியை கொன்று கைதாகி ஜாமினில் வந்து தலைமறைவான கணவனை போலீசார் கேரளாவில் கைது செய்தனர்.

Update: 2024-01-05 03:58 GMT
மனைவி கொலை வழக்கில் கைதான ராஜேஷ்
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே  கோயிக்கல்தோப்பு  பகுதியை சேர்ந்த ராஜேஷ் (38) கொத்தனார். இவரது மனைவி  சௌமியா என்பவரை  ராஜேஷ் கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ம் தேதி மது குடிக்க நகையை கொடுக்க மறுத்த காரணத்தல்,  அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.      நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளிவந்த ராஜேஷ் அதே வருடம் ஜூலை மாதத்தில் தலைமறைவானார்.  மட்டுமின்றி பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுக் கொண்டு தலைமறைவு  வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.        இவரை பிடிக்க நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்த  நிலையில், கேரளா மாநிலம்  கொல்லம் பகுதியில் கட்டிட வேலை செய்துவிட்டு அறையில் தங்கி இருக்கும் போது, குமரி மாவட்ட தனிப்படை எஸ். ஐ மகேஸ்வரன் தலைமையின் போலீசார் நேற்று  ராஜேஷை பிடித்து, நித்திரவிளை காவல் நிலையம் கொண்டு வந்து ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News