சட்டவிரோத மது விற்பனை - 1500 மதுபாட்டில்கள் பறிமுதல்
தேவகோட்டை அருகே சட்ட விரோத விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1500 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.;
Update: 2024-04-21 06:47 GMT
பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்
தேவகோட்டையில் மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐ. தவமணி தலைமயிலான போலீசார், சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேவகோட்டையில் இருந்து சிவகங்கை செல்லும் சாலையில் தளக்காவயல் புதுக்குடியிருப்பு பகுதியில் விரிசுழி ஆற்றையொட்டிய பகுதியில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார், அந்த வீட்டில் சோதனை நடத்தி அங்கிருந்த 1500 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.