1,751 மது பாட்டில்கள் பறிமுதல் - 24 பேருக்கு காப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் போலீசார் நடத்திய சோதனையில் சட்ட விரோத விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1,751 மது பாட்டில்களை பறிமுதல் செய்து , 24 பேர் கைது செய்தனர்.

Update: 2024-04-17 03:04 GMT

பைல் படம் 

தஞ்சை மாவட்டத்தில், தேர்தல் நேரத்தில் எந்தவித குற்றச்செயல்களும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு, காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையொட்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் 114 அதிவிரைவுப்படை உருவாக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனொரு பகுதியாக திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய உட்கோட்டங்களில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் திங்கள், செவ்வாய் தொடர் சோதனை நடத்தப்பட்டன. இதில் 24 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 1,751 மது பாட்டில்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையானது இனிவரும் நாட்களில் மிக தீவிரமாக இருக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

Similar News