தகாத உறவு,கணவன் கொலை - மனைவி, கள்ளக்காதலன் கைது
மதுரை அருகே தகாத உறவிற்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த சம்பவத்தில் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே வெள்ளூர் கிராமத்தில் இரண்டாவது மனைவியுடன் தகாத உறவில் இருந்த கள்ளக்காதலன். தகாத உறவிற்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனை வைத்து இரண்டாவது மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடி அருகே உள்ளுறை சேர்ந்தவர் குருநாதன் வயது 55 இவர் பால் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மகன் மற்றும் மகள் இருந்து வரும் நிலையில் இரண்டாவதாக மகாலட்சுமி என்பவரை திருமணம் செய்து அவருடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த குருநாதன் அதிகாலை பிணமாக இறந்து கிடந்துள்ளார்.
குருநாதன் உயிரிழந்தது தொடர்பாக அக்கம்பக்கத்தினர் தகவல் அளிக்கவே அவரது முதல் மனைவியின் மகன் ராமருக்கு தனது தந்தையின் இறப்பில் சந்தைக்கும் இருப்பதாக வில்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குருநாதன் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து உடற்கூறு ஆய்வில் உயிரிழந்த குருநாதன் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டதாக முடிவுகள் வெளியாகி இருந்தது சந்தேகம் அடைந்த போலீசார் இரண்டாவது மனைவி மகாலட்சுமியே விசாரித்தனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது தனக்கும் தனது வீட்டின் அருகே உள்ள கள்ளக்காதலன் சுப்பிரமணி என்பவருக்கும் நீண்ட நாள் தொடர்பு இருந்ததாகவும்., எங்களை அடிக்கடி குருநாதன் கண்டித்ததாகவும் ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த குருநாதன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எனது கள்ளக்காதலுடன் தன்னை அனுப்பி வைத்ததாகவும்., இருப்பினும் சுப்பிரமணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான் மீண்டும் எனது கணவர் குருநாதனுடன் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எனது கள்ளக்காதலுடன் நான் தனிமையில் இருந்ததை எனது கணவர் பார்த்து கண்டித்த நிலையில்., அவரை கொலை செய்ய சுப்ரமணியுடன் சேர்ந்து திட்டம் தீட்டியதாகவும் கொலை செய்யும் முன்பு நான் கோவை சென்று விட்டதாகவும் 27 ஆம் தேதி இரவு தனியாக படுத்திருந்த எனது கணவர் குருநாதனை சுப்பிரமணி கழுத்து நிறுத்தி கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து., தலைமறைவாகியிருந்த கள்ளக்காதலன் சுப்பிரமணியை நேற்று மாலை கைது செய்த போலீசார் இருவரையும் பேரையூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலுடன் சேர்ந்து வாழ மனைவியை வழியனுப்பிய கணவர்., மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்து இருத்தினங்களுக்கு முன்பு கள்ளக்காதனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் மதுரை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.