கும்பகோணத்தில் சிறுமி குளிப்பதை படம் எடுத்த வாலிபர் கைது
கும்பகோணத்தில் சிறுமி குளிப்பதை படம் எடுத்த வாலிபர், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-29 18:01 GMT
கோப்பு படம்
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் கும்ப கோணத்தில் உள்ள தனது உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந் துள்ளார். கும்பகோணம், பைராகித்தோப்பைச் சேர்ந்த செந் தில்குமார் மகன் சூர்யா (வயது 19) என்பவர்,
அந்தச் சிறுமி குளிப்பதை தனது செல்போன் கேமரா மூலம் படம் பிடித்த தாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அந்த சிறுமி அதிர்ச்சியடைந்து கூச்சலிட் டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு சூர்யா அங் கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து, அந்தச் சிறுமியின் உறவினர், கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.