எண்ணெய் இல்லாமல் தோசை கேட்டு ஓட்டல் உரிமையாளருக்கு அடி உதை

குத்தாலம் அருகே தோசையில் எண்ணெய் ஊற்றியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கடை உரிமையாளரை கடுமையாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-12 07:01 GMT

சிசிடிவி காட்சி 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காடு கடைவீதியில் கௌதமன் என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அசைவ உணவகம் நடத்தி வந்துள்ளார். இவரது கடைக்கு சாப்பிடுவதற்காக பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வருகை தந்துள்ளனர். தொடர்ந்து எண்ணெய் ஊற்றாமல் தோசை வேண்டுமென கேட்டுள்ளனர். அப்போது கடை ஊழியர் தோசையில் எண்ணெய் ஊற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அனைவரும் கடை உரிமையாளர் கௌதமனை கடுமையாக தாக்கியுள்ளனர்.  கடையில் இருந்த சேர் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உரிமையாளரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் காயமடைந்த கௌதமன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் கௌதமன் அளித்த புகாரின் அடிப்படையில் திருவாவடுதுறை பிள்ளையார் தோப்பு பகுதியை சேர்ந்த திவாகர் , ராஜராஜன் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து குத்தாலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News