தந்தை வாங்கிய கடனுக்காக மகன் கடத்தல் - டிரைவர் கைது
தந்தை வாங்கிய கடனுக்காக மகன் கடத்தல் - டிரைவர் கைது;
By : King 24x7 Website
Update: 2023-12-13 17:39 GMT
தந்தை வாங்கிய கடனுக்காக மகன் கடத்தல் - டிரைவர் கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதுடன் கோவில்பட்டி சாலையில் ஸ்டேஷ்னரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது நண்பரான பாண்டிசேரியைச் சேர்ந்த பாஜக மாநில அறிவுசார் பிரிவு இணை அமைப்பாளர் சேகர் என்பவரிடம் ரூ.5 லடசம் கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொடுத்த கடனை பலமுறை திருப்பிக்கேட்டும் தராததால் நேற்று முன்தினம் மணப்பாறைக்கு வந்த சேகர் ஸ்டேஷனரி கடையில் இருந்த ஞானப்பிரகாசத்தின் மகன் எபிநேசன் என்பவரை காரில் கடத்திச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மணப்பாறை போலீசார்,பாண்டிச்சேரியில் இருந்த சேகரை கைது செய்து எபிநேசனை மீட்டனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த டிரைவர் சரண் என்பவர் மணப்பாறை காவல்நிலையத்தில் நேற்று சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.