சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

அணைக்கட்டு அருகே தொடர் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-03-22 04:59 GMT

சரத்குமார் 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த நெல்லி மரத்து கொள்ளை பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தார். பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஆட்சியர் சுப்புலட்சுமி சரத்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய இன்று உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News