மக்கள் தேசம் நிர்வாகி கொலை - 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது

மக்கள் தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான காவேரிப்பாக்கம் பேரூராட்சி துணைத் தலைவரான திமுகவை சேர்ந்த தீபிகாவின் கணவர் முருகன் உட்பட 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2024-02-28 08:19 GMT

பைல் படம் 

 ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தன். மக்கள் தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர். இவர் கடந்த ஜனவரி 31ம் தேதி இரவு 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் கோபி, ராஜேஷ், தாமோதரன், சந்துரு, சூர்யா, காவேரிப்பாக்கம் பேரூராட்சி துணைத்தலைவரான திமுகவைச் சேர்ந்த தீபிகாவின் கணவர் முருகன், திமுக மாவட்ட கவுன்சிலரின் மகன் பிரபாகரன், வினோத், குமார் ,சுரேஷ் ஆகிய 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி 10 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

மேலும் நெமிலி அடுத்த புன்னை கிராமத்தில் டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பு (எ) சதீஷ்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் திமுக பிரமுகர்கள் 2 பேர் உட்பட ஒரே நாளில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News