கும்பகோணம் அருகே தனியாா் பள்ளி ஊழியா் மா்மச்சாவு
கும்பகோணம் அருகே தனியாா் பள்ளி ஊழியா் மா்மமான முறையில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
கோப்பு படம்
கும்பகோணம், அருகே உள்ள மாத்தூரைச் சோ்ந்தவா் சில்வஸ்டா் (46). இவா், இங்குள்ள தனியாா் பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலைபாா்த்து வந்தாா். இவரது மனைவி ஷா்மிளா (45) வுக்கும், இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக தனியாக வசித்து வந்தனா்.
இந்நிலையில், ஷா்மிளாவுக்கு அவரது கணவா் சில்வஸ்டா் வேலை பாா்க்கும் பள்ளியிலிருந்து வந்த தகவலின்படி, ஷா்மிளா தனது கணவரை பல இடங்களில் தேடி சாக்கோட்டையில் உள்ள கேஎம் எஸ்எஸ்எஸ் காலனியில் உள்ள ஒரு வீட்டுக்குச் சென்றுபாா்த்தபோது அங்கு சில்வஸ்டா் மது அருந்தி போதையில் இறந்து கிடந்தாராம்.
நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் ஷா்மிளா அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளா் சுகுணா செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரணை நடத்தினாா்.