சேலத்தில் காவலாளியை தாக்கியவர் கைது
சேலத்தில் இரவு நேரக் காவலாளியை தாக்கியவர் கைது
By : King 24x7 Website
Update: 2024-01-03 05:26 GMT
சேலம் சூரமங்கலம் பகுதியில் மேக்னசைட் அலுவலகத்தில் இரவு காவலாளியாக செல்வம் (வயது 45) என்பவர் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கு வந்த மர்மநபர் அலுவலகத்தின் பூட்டை உடைக்க முயன்றார். சத்தம் கேட்டு செல்வம் அங்கு சென்று அந்த நபரை பிடிக்க முயன்றார். அப்போது அந்த நபர் காவலாளியின் கழுத்தை நெறித்து தாக்கினார். தொடர்ந்து அங்கு வந்த பொதுமக்கள் அந்த நபரை பிடித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர் சேலம் 4 ரோடு நாராயணசாமிபுரம் பகுதியை சேர்ந்த ரவுடி கிளி என்கிற மணிவண்ணன் என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.