மது போதையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபர் கைது.

மது போதையில் கோவிலுக்குச் சென்ற பெண்ணை சேலை பிடித்து இழுத்து சில்மிஷம் செய்த நபர் கைது.

Update: 2023-12-14 11:48 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மது போதையில் கோவிலுக்குச் சென்ற பெண்ணை சேலை பிடித்து இழுத்து துன்புறுத்திய நபர் கைது. கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா,நெரூர் வடபாகம் அருகே உள்ள டி. சின்ன காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் வயது 34. இவர், கரூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், டிசம்பர் 11ஆம் தேதி இரவு 9 மணி அளவில், ரமேஷின் மனைவி, காயத்ரி கரூரில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளார். சாமி கும்பிட்ட பிறகு திரும்பி காருக்கு வரும்போது, மது போதையில் இருந்த, கரூர் கோட்டையம்மன் கோவில் தெருவை சேர்ந்த வீராசாமி மகன் சம்பத்குமார் வயது 37 என்பவர், காயத்ரியின் சேலையை பிடித்து இழுத்து, துன்புறுத்தி உள்ளார். இதனை கண்ட, கார் டிரைவர் சதீஷ்குமார் தட்டி கேட்டுள்ளார். மது போதையில் இருந்த சம்பத்குமார் கார் டிரைவர் சதீஷ்குமாரை தகாத வார்த்தை பேசி திட்டியதோடு, தடியைக் காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சதீஷ்குமார், கரூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மது போதையில் தகாத செயலில் ஈடுபட்ட சம்பத்குமாரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Tags:    

Similar News