டூவீலர், கார் மோதிய விபத்தில் தாய், மகள் படுகாயம்
குமாரபாளையம் அருகே டூவீலர் கார் மோதிய விபத்தில் தாய் மகள் படுகாயமடைந்தனர்;
By : King 24x7 Website
Update: 2024-02-29 12:51 GMT
குமாரபாளையம் அருகே டூவீலர் கார் மோதிய விபத்தில் தாய் மகள் படுகாயமடைந்தனர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பகுதில் வசிப்பவர் ஸ்வேதா, 24. ஐ.டி. நிறுவன வேலை. இவர் தனது டி.வி.எஸ். ஜுபிட்டர் 125 என்ற வாகனத்தில், பின்புற சீட்டில் தன் அம்மா பரிமளா, 44, வை, உட்கார வைத்துக்கொண்டு, நேற்றுமுன்தினம் மாலை 05:30 மணியளவில் சேலம் கோவை புறவழிச்சாலை,காவிரி பாலம் நுழைவுப்பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இவருக்கு பின்னால் வேகமாக வந்த ஹுண்டாய் வெர்மா கார் ஓட்டுனர், இவரது டூவீலரில் மோத, நிலைதடுமாறி தாய், மகள் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தனர். இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கார் ஓட்டுனரை குமாரபாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.