தாளவாடியில் பெண் மர்ம மரணம்: கணவரிடம் போலீசார் விசாரனை

தாளவாடியில் பெண் மர்மான முறையில் உயிரிழந்ததை அடுத்து கணவரிடம் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள்.

Update: 2024-04-30 10:53 GMT

மார்மான முறையில் உயிரிழந்த பெண்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே காதல் மனைவி அடித்து கொலையா ? கணவனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சத்தி அடுத்த தாளவாடி, தொட்டகாஜனூர், நாய்க்கர் வீதியை சேர்ந்தவர் மண்டேசாமி (எ) ரமேஷ் (27) இவரது மனைவி ஆஷா (23) இருவரும் காதலித்து கடந்த 4 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின் தொட்டகாஜனூர் கிராமத்தில் உள்ள ரமேஷ் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்பொழுது ஆஷா 5 மாத கர்ப்பமாக உள்ளார். இந்திலையில் ரமேஷிற்கு குடிப்பழக்கம், சீட்டு ஆடும் பழக்கம் இருந்து வந்ததால் தான் சம்பாதிக்கும் பணத்தை சரியாக வீட்டு செலவிற்கு தராமல் இருந்து வந்துள்ளார்.

இதனால் கணவன் மனைவிற்கிடையே இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. ஆஷாவின் தாய் இருவரையும் சமாதானம் செய்து விட்டு தனது மகளுக்கு செலவிற்கு பணம் கொடுத்து வந்துள்ளார். நேற்று ரமேஷ் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்து ஆஷாவை அடித்துள்ளார். மாதம்மா சென்று இருவரையும் சமாதானம் செய்து விட்டு ஆஷாவை தங்கள் வீட்டிற்கு அழைத்தற்கு அவர் வர மறுத்துள்ளார். மாதம்மா பேத்தி ஆதியாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். மாதம்மா ஆதியாவை ஆஷா வீட்டில் விடுவதற்க்காக ஆஷா வீட்டிற்கு சென்று ஆஷாவை கூப்பிட்டுள்ளார்,

  ஆஷா பேசாததால் வீட்டினுள் சென்று பெட் ரூமில் பார்த்த போது கட்டிலுக்கு அடியில் ஆஷா பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததை கண்டு சத்தம் போட அருகில் வசித்து வந்தவர்கள் வந்து சுயநினைவு இல்லாமல் இருந்த ஆஷாவை தனியார் வாகனம் மூலம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சமபவம் குறித்து அப்பகுதி மக்கள் தாளவாடி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து தனியார் மருத்துவமனைக்கு சென்ற எஸ்எஸ்ஜ சந்திரமோகன் மற்றும் போலீசார் இறந்த ஆஷாவின் உடலை தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாளவாடி போலீஸார் ரமேசை கைது செய்து விசாரனை நடத்தி வருகினன்றனர்.

Tags:    

Similar News