ஆறுகாணியில் வீட்டின் முன்பு நிறுத்திருந்த வாகனங்களை உடைத்த மர்மநபர்கள்

ஆறுகாணியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை நள்ளிரவு அடித்து உடைத்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2024-05-29 11:50 GMT

உடைக்கப்பட்ட வாகனம்

குமரி தமிழக கேரளா எல்லை பகுதியான ஆறுகாணி மலைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மலையோர பகுதி என்பதால் சமூக விரோதிகள் மது போதை மற்றும் கஞ்சா போதையில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் போதகர் அருள் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது கஞ்சா கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதுடன் அங்குள்ள வீடுகளையும் வாகனங்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

இதில் மூன்று பேர் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் கஞ்சா போதையில் அடித்து உடைத்தது தெரியவந்தது.இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் ஆறுகாணி பகுதியில் நள்ளிரவு கும்பல் ஒன்று வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ,மினி டெம்போ, இருசக்கர வாகனம் என வாகனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். சத்தம் கேட்டு பொதுமக்கள் வெளியே வந்ததும் அவர்களை 6- பேர் கொண்ட அந்த கும்பல் மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் அச்சமடைந்த மக்கள் கதவை பூட்டிவிட்டு உள்ளே சென்றுள்ளனர்.பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. இதுகுறித்து ஆறுகாணி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.இரு மாநில எல்லை பகுதி என்பதாலும் மலையோர பகுதி என்பதாலும் போலீசார் அங்கு ரோந்து பணிகளில் ஈடுபடுவது இல்லாத காரணத்தால் இது போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த பகுதியில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனைகளும் நடைபெறுவதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News