பல்லாயிரம் கோடி பணம் மோசடி செய்த நியோ-மேக்ஸ் - முதலீட்டாளர்கள் புகார் அளிக்க போலீசார் அறிவிப்பு !!

Update: 2024-11-04 10:25 GMT

நியோ-மேக்ஸ்

நியோ-மேக்ஸ்’மற்றும் அதன் 42 துணை நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் நவ.15-ம் தேதி வரை புகார் தெரிவிக்கலாம் என, மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார் அறிவிப்பு விடுத்துள்ளனர்.

இது குறித்து மதுரை பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் இன்று (நவ.4) வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ‘நியோ-மேக்ஸ்’ மற்றும் அதனுடைய 42 துணை நிறுவனங்கள் பொதுமக்களிடம் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடுகளைப் பெற்று மோசடி செய்தததாக அந்த நிறுவனங்களின் இயக்குநர்கள், முகவர்கள் என, 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் தற்போது, ஜாமீனிலும் உள்ளனர்.

இது குறித்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடக்கிறது. நீதிமன்ற உத்தரவின்படி, நியோ - மேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் முதலீடு செய்து, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மதுரை தபால் தந்திநகர் பார்க் டவுன், சங்கரபாண்டியன் நகரிலுள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தங்களது பெயர், முகவரி செல்போன் எண், ஆதார் எண், முதலீட்டுப் பத்திரங்களின் எண்ணிக்கை, நிறுவனத்தின் பெயர், முதலீட்டுத் தொகை, முதலீடு செய்து வங்கிக் கணக்கு, முகவர்களின் விவரங்களுடன் நவம்பர் 15 வரையிலும் நேரில் புகார் அளிக்கலாம். என்று அந்த பதிவில் இருந்தது.

Tags:    

Similar News