கூரியர் நிறுவனம் பெயரில் நூதன மோசடி - நாமக்கல் எஸ்.பி எச்சரிக்கை

கூரியர் நிறுவனம் பெயரில் நூதன மோசடி - நாமக்கல் எஸ்.பி ராஜேஷ்கண்ணன் எச்சரிக்கை

Update: 2024-02-01 17:42 GMT

கூரியர் நிறுவனம் பெயரில் நுதன மோசடி - நாமக்கல் எஸ்.பி ராஜேஷ்கண்ணன் எச்சரிக்கை 

கூரியர் நிறுவனம் பெயரில் நூதன மோசடி... -நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக, செல்போனில் நூதன மோசடியில் ஈடுபடும் மர்ம நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஷ்கண்ணன் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அடையாளம் தெரியாத சைபர் குற்றவாளிகள் தாங்கள் ப்ளூ டார்ட் கூரியரில் இருந்து பேசுவதாக கூறி பொதுமக்களுக்கு பார்சல் வந்துள்ளதாக சொல்கின்றனர். அதற்கு பொதுமக்கள் தாங்கள் பார்சல் ஏதும் ஆர்டர் செய்யவில்லை என்று கூறினால் உடனே பார்சலை கேன்சல் செய்வதற்கு அவர்களது போனுக்கு வரும் ஓடிபி எண்ணை சொல்லும்படி அல்லது தாங்கள் சொல்லும் யு எஸ் எஸ் டி கோட் மற்றும் தொலைபேசி எண்ணை டயல் செய்யும் படி கூறியும் , அதை செய்த பிறகு கால் பார்வேர்டிங் மூலம் பாதிக்கப்பட்டவரின் தொலைபேசி அழைப்புகளை சைபர் குற்றவாளிகள் தங்கள் தொலைபேசிக்கு மாற்றியும், அதன் மூலம் வாட்ஸ் அப் செயலியை தங்களது தொலைபேசியில் மாற்றிக் கொண்டு, அதன்மூலம் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் பணம் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பி ஏமாற்றி வருகின்றனர் இதில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த நபர்கள் கொரியர் நிறுவனங்களில் இருந்து பேசுவதாக தமிழ் மொழியிலேயே பேசி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அடிக்கடி ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்து வருபவர்களையும், கொரியர் மூலம் வியாபாரம் சம்பந்தமான பார்சல் அனுப்புபவர்கள் மற்றும் பெறுபவர்களையும் குறி வைத்து மோசடியில் ஈடுபடுகின்றனர். ஆகவே பொதுமக்கள் கொரியர் மூலம் பொருட்களை பெறும் போது கொரியர் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறினால் கவனமுடன் செயல்படுமாறும், அடையாளம் தெரியாத நபர்களிடம் ஓடிபி எண்ணை தெரிவிக்க கூடாது என்றும் யூ எஸ் எஸ் டி கோடு மற்றும் அவர்கள் சொல்லும் தொலைபேசி எண்ணை டயல் செய்யக்கூடாது என்றும், இது போன்ற மோசடியால் பாதிக்கப்பட்ட நபர்கள் சைபர் கிரைம் ஹெல்ப் லைன் 1930 அல்லது www cybercrime.gov.in மூலம் புகார்களை காலதாமதம் செய்யாமல் உடனே தெரிவிக்க வேண்டும் என்றும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ்கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News