ஓட்டப்பிடாரம் அருகே வாகனம் மோதிய விபத்தில் ஒடிசா வாலிபர் பலி

ஓட்டப்பிடாரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஒடிசா வாலிபர் உயிரிழந்தார்.;

Update: 2024-05-14 15:44 GMT
ஓட்டப்பிடாரம் அருகே வாகனம் மோதிய விபத்தில் ஒடிசா வாலிபர் பலி

கோப்பு படம் 

  • whatsapp icon

ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரபிதாரா ராகுல் மகன் நிரஞ்சன் (36). இவர் தூத்துக்குடி அருகேயுள்ள குறுக்குச்சாலையில் உள்ள கம்பெனியில் மெஷின் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் அங்குள்ள வீரபாண்டி நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வேலை முடிந்து தான் குடியிருக்கும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News