பெட்ரோல் குண்டு வீசிய 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தல் பின்னணியில் ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீசிய 8 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2024-05-28 09:19 GMT

பைல் படம் 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 23.04.2024 அன்று ரேஷன் அரிசி கடத்தல் பின்னணியில் ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கிலும், மற்றொரு கொலை முயற்சி வழக்கிலும் ஈடுபட்ட கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்த பால்பாண்டியன் மகன் சண்முகராஜ் (எ) கட்டத்துரை (26), கயத்தாறு பிரியங்கா நகரை சேர்ந்த ஜோதிராஜா மகன் ராஜா (எ) சண்முகராஜா (22), கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த பாலமுருகன் மகன் சுடலைமுத்து (எ) சண்டியர் சுடலை (23), கயத்தாறு மருத்துவமனைச் சாலை பகுதியைச் சேர்ந்த முத்துகுட்டி மகன்கள் முத்துகிருஷ்ணன் (எ) சஞ்சய் (23), நரசிம்மன் (21) கடம்பூர் ஓனமாக்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் கணேஷ்குமார் (22), கடம்பூர் குப்பண்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன பாண்டியன் மகன் சண்முகபாண்டி (23), பழனிகுமார் மகன் அருண்குமார் (எ) அப்பு (22) ஆகிய 8 பேரையும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் 8பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி 8 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து 8பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போச்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 4 பேர் உட்பட மொத்தம் 68 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News