பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

Update: 2023-12-27 13:06 GMT
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக ஜெகநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவர் பல்கலைக்கழக நுழைவு வாயிலில் வைத்து மாநகர கமிஷனர் உட்பட கருப்பூர் போலீசார் அவரை திடீரென கைது செய்தனர். இது குறித்து அவர் மீது கருப்பூர் போலீசாரிடம் விசாரித்த போது, போலி ஆவணங்கள் வைத்து அரசு நிதியை வீணடித்தது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக கூறினர். ஓமலூர் அருகே பெரியார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றிய நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News