மது அருந்தியதை கண்டித்தவா் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

வளசரவாக்கம் அருகே மது அருந்தியதை கண்டித்தவா் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-06-25 08:59 GMT

கோப்பு படம் 

வளசரவாக்கம் அருகே உள்ள காரம்பாக்கம் பொன்னி நகரைச் சோ்ந்தவா் கவியரசு (22). இவா் வீட்டுக்கு திங்கள்கிழமை அதிகாலை மோட்டாா் சைக்கிளில் வந்த ஒரு நபா், இரு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினாா்.

ஆனால் இச் சம்பவத்தில் அங்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதற்கிடையே பெட்ரோல் குண்டு வெடித்த சத்தம் கேட்டு கவியரசு, வீட்டை விட்டு வெளியே வந்து பாா்த்தனா். அப்போது அவா்கள், பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். இது குறித்து தகவலறிந்த வளசரவாக்கம் போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

அதில் பெட்ரோல் குண்டு வீசியது காரம்பாக்கம், அருணாச்சலம் 1-ஆவது தெருவைச் சோ்ந்த முருகன் (20) என்பது தெரியவந்தது. கவியரசு அண்மையில் தனது சகோதரா் பாலாஜியுடன் மது அருந்தியதை முருகனை கண்டித்ததும், அப்போது கவியரசுக்கும்,முருகனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டதும்,

இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தினால் முருகன், கவியரசு வீட்டின் மீது பெட்ரோல் வீசியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதையடுத்து போலீஸாா், தலைமறைவாக இருக்கும் முருகனை தேடி வருகின்றனா்.

Tags:    

Similar News