கோழி கடை ஊழியர் கொலை விவகாரம்: கேரளா தடயவியல் நிபுணர்கள் ஆய்வு
மாங்குழியில் கோழிக்கடை ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட வீட்டில் கேரள தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டை அடுத்த செங்கவிளை அயிரை அம்பிளிகோணம் பகுதியில் உடல் முழுதும் காயத்துடன் இறந்த நிலையில் ஒருவர் கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டு, பொழியூர் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அங்கு சென்று உடலை கைப் பற்றி திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்து கிடந்தவர் குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே வள்ளவிளை புதுவல் புத்தன்வீட்டை சேர்ந்த ஹனிபா மகன் முகமது அசீம் என்பதும் மேடவிளாகம் பகுதியில் ஒரு கோழி கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.
இவருக்கும், அடைக்காக்குழி அருகே மங்குழி பகுதியை சேர்ந்த சமீர்கான் என்பவரது மனைவி ஜெனிபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து உள்ளது. இந்நிலையில்,முகமது அசின், ஜெனிபர் வீட்டிற்கு சென்ற போது அங்கு முகமது அசீம் இருந்துள்ளார் அப்போது அவரை சமீர்கான் உலக்கையால் கடுமையாக தாக்கி உள்ளார்.இதில், பலத்த காயத்துடன் நினைவிழந்த முகமது அசீமை சமீர்கான் அவரது மனைவி ஜெனிபா ஆகியோர் பைக்கில் கொண்டு சென்று அம்பிளிகோணம் பகுதியில் ரோட்டோரம் வீசி சென்று உள்ளார்.
இது தொடர்பாக பொழியூர் போலீசார் சமீர்கான் மற்றும் அவரது மனைவி ஜெனிபா ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த நிலையில் கேரள தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் நேற்று முகமது அசீம் கொலை செய்யப்பட்ட வீட்டிற்கு சென்று தடையங்களை சேகரித்தவுடன் உலக்கை மற்றும் அதில் பணிந்திருந்த ரத்தக்கரை மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.