போலீஸ் கமிஷனர் அதிரடியால் மசாஜ் சென்டர்களில் முடங்கிய விபசாரம்
போலீஸ் கமிஷனர் அதிரடியால் மசாஜ் சென்டர்களில் முடங்கிய விபசாரம்
By : King 24x7 Website
Update: 2023-12-30 18:29 GMT
சேலம் அழகாபுரம் புதிய பஸ் நிலையம், 5ரோடு, சூரமங்கலம், சீலநாயக்கன்பட்டி, அஸ்தம்பட்டி போன்ற பகுதிகளில் முறையான அனுமதி இன்றியும் அனுமதி பெற்றும் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சட்டத்திற்கு புறம்பாக விபசாரம் நடந்து வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரிக்கு தகவல்கள் வந்தன. இதைத்தொடர்ந்து தனிப்படை அமைத்து வடக்கு மற்றும் தெற்கு துணை கமிஷனர்களின் மேற்பார்வையில் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு, விபசாரத்தில் ஈடுபட்ட உரிமையாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிலர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது . இந்த அதிரடி நடவடிக்கையால் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் நடைபெற்று வந்த விபச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்பட்டது . மேலும் முறையான அனுமதி பெற்று நடந்து வரும் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த செய்து தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர். மேலும் சேலம் மாநகரத்தில் உள்ள விடுதிகளிலும் திடீர் சோதனைகளை போலீசார் மேற்கொண்டு வருவதால் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வருபவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.