தூத்துக்குடியில் கடத்தப்பட்ட 4 குழந்தைகள் மீட்பு

தூத்துக்குடியில் கடத்தப்பட்டு விற்கப்பட்ட 4 குழந்தைகளை மீட்ட போலீசார், குழந்தை கடத்தல் குற்றவாளிகளிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-20 05:03 GMT

எஸ்பி அலுவலகம் 

தூத்துக்குடி மாநகரில் கடந்த 9ம் தேதி அந்தோணியார் கோவில் பகுதியில் சாலையில் ஒரங்களில் படுத்து உறங்கிய சந்தியா என்ற பெண்ணின் நான்கு மாத பெண் கைக்குழந்தையை மர் நபர்கள் கடத்திச் சென்றனர். இந்த சம்பவம் தமிழக மற்றும் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் 10 தனி படைகள் அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கருப்பசாமி மற்றும் ராஜன் ஆகியோரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு தகவல் கொடுத்தால் உரிய சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை சார்பில் அறிவித்தனர்.

இதையடுத்து குழந்தை கடத்தலில் தொடர்புடைய ராஜன் மற்றும் கருப்பசாமியை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கடத்திய குழந்தைகளை குழந்தை இல்லாத நபர்களிடம் பல லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதை அடுத்து தூத்துக்குடி மாநகரில் கடத்தப்பட்ட 4 மாத பெண் குழந்தை மற்றும் திருச்செந்தூரில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட சுத்தமல்லியைச் சேர்ந்த முத்துப்பேச்சி என்பவரது இரண்டரை வயது குழந்தை மற்றும் குலசேகரப்பட்டணம் பகுதியில் மதுரையைச் சேர்ந்தவர் 3 வயது மகளான கார்த்திகை வள்ளி மேலும் தூத்துக்குடி மாநகர பகுதியில் இருந்து கடத்தப்பட்ட புகார் அளிக்கப்படாத மற்றொரு குழந்தை உள்ளிட்ட நான்கு குழந்தைகளை காவல்துறையினர் மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து குழந்தை கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மற்றும் குழந்தைகளை பறி கொடுத்த பெற்றோர்களை வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ராஜன் மற்றும் கருப்புசாமி ஆகியோர் வேறு ஏதும் குழந்தை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார்களா? என்பது குறித்து தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News