நகைக்கடையில் திருட்டு - ஆந்திர வாலிபர் கைது

தேன்கனிக்கோட்டை நகைக்கடையில் தங்க செயின்கள் திருட்டு - ஆந்திர வாலிபர் கைது

Update: 2023-12-31 12:26 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை எம்.ஜி.ரோட்டில் தங்க நகைக்கடை நடத்தி வருபவர் நேமாராம் (55) இவர் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி கடையில் இருந்தபோது நகைக்கடைக்கு சென்ற வாலிபர் ஒருவர் தங்க செயின் மற்றும் மோதிரம் வாங்க வந்திருப்பதாக கூறி கடையில் இருந்த தங்க நகைகளை பார்த்துள்ளார். அப்போது திடீரென நேமாராமின் கவனத்தை திசை திருப்பி போன் வந்தது போல் நடித்து போன் பேசியவாறு 3 தங்க செயினை எடுத்து கொண்டு வெளியே காத்திருந்த தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார். இது தொடர்பாக நேமாராம் கொடுத்த புகாரின் பேரில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை தேன்கனிக்கோட்டை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த திருட்டு வழக்கில் கடந்த ஜூன் 6 ஆம் தேதி செயின் திருட்டில் ஈடுபட்டதாக கர்நாடகா மாநிலம் பெங்களூரு கொல்லஹள்ளியை சேர்ந்த ஆனந்தா (19) என்ற வாலிபரை தேன்கனிக்கோட்டை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த ஆந்திர மாநிலம், கட்டமடுவு பகுதியை சேர்ந்த சம்மைய்யா (24) என்ற வாலிபரை போலீசார் தேன்கனிக்கோட்டையில் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அவரை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி ஓசூர் சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News