ரூ. 20 லட்சம் மோசடி வழக்கில் இருவா் மீது வழக்கு
ரூ. 20 லட்சம் மோசடி வழக்கில் இருவா் மீது வழக்கு
By : King 24x7 Website
Update: 2023-12-13 10:55 GMT
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே நாச்சன்வளவை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி மகேஸ்வரி, 46. இவருக்கும் கோல்காரனுாரில் 'டைல்ஸ் கடை நடத்தும் முருகன் மனைவி தேவகி, கடையின் மற்றொரு பங்குதாரர் வசந்த் ஆகியோருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த இருவரும், 20 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் டைல்ஸ், கிரானைட் கடையில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாகவும், மாதந்தோறும், 25,000 ரூபாய் லாபத்தில் பங்காக வழங்குவதாகவும், மகேஸ்வரியிடம் தெரிவித்தார். அதை நம்பிய அவர், 2021 மார்ச், 15ல், 20லட்சம் ரூபாயை, தேவகி, வசந்திடம் கொடுத்தார். இதையடுத்து, 2 மாதங்கள் லாபத்தொகையை வழங்கிவிட்டு பின் பணம் தர மறுத்தனர். கடையின் வரவு செலவையும் காட்ட மறுத்து விட்டனர். இதுகுறித்து கடந்த வாரம் மகேஸ்வரி புகார்படி, சேலம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். நேற்று முன் தினம் தேவகி, வசந்த் மீது மோசடி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.