அரசு வேலை வாங்கிதருவதாக கூறி ரூபாய் 5 லட்சம் மோசடி
குழித்துறையில் அரசு வேலை வாங்கிதருவதாக கூறி ரூபாய் 5 லட்சம் மோசடி - 5 பேர் மீது வழக்கு.
Update: 2024-03-10 14:08 GMT
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே இடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் தனது மனைவிக்கு வேலை தேடி கொண்டிருந்தார். அப்போது மேக்காமண்டபத்தை சேர்ந்த மேஷாக்,விழுப்புரம் ஞானசேகர்,நிலக்கோட்டை வீரக்குமார், டேவிட்மதி, வேணுகோபால் ஆகியோர் சுரேஷ்குமாரிடம் அறிமுகம் ஆகி உள்ளனர். இவர்கள் சுரேஷ்கு மாரிடம், பத்திர பதிவுத்துறையில் எழுத்தர் வேலை இருப்பதாகவும், அதற்கு 10 லட்சம் ரூபாய் வேண்டும் எனவும் கேட்டு உள்ளனர். அதற்கு சுரேஷ்குமார் முதற்கட்டமாக 5 லட்சமும், வேலை ஆணை கிடைத்தவுடன் மீதி 5 லட்சமும் தருவதாக கூறியுள்ளார்.அதன்படி முன்பணமாக ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் நீண்ட காலம் ஆன பின்பும், சுரேஷ் குமாரின் மனைவிக்கு வேலை கிடைக்க வில்லை. பணத்தையும் திரும்பி வில்லை. கொடுக்கஇதையடுத்து சுரேஷ் குமார், தமிழக முதல்வர் முகாம் அலுவலகத்தில் புகார் செய்தார். அதிகாரி கள் களியக்காவிளை போலீசாருக்கு அந்த மனுவை அனுப்பிவைத்தனர். அதன் அடிப்படையில், களியக்காவிளை போலீசார் மேஷாக் உட்பட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.