உடும்பு தோலில் செய்யப்பட்ட இசைக் கருவிகள் பறிமுதல்: முதியவா் கைது

உடும்பு தோலில் செய்யப்பட்ட இசைக் கருவிகள் பறிமுதல் செய்து முதியவா் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-04-07 15:15 GMT

கைது செய்யப்பட்ட முதியவர்

 திருவிடைமருதூா் வட்டத்துக்குள்பட்ட ஆடுதுறை பகுதியில் உடும்பு தோல்களால் இசைக்கருவிகள் செய்யப்படுவதாக கும்பகோணம் வனச் சரக அலுவலகத்துக்கு தகவல் வந்தது. இதன் பேரில் கும்பகோணம் வனச்சரக அலுவலா் என். பொன்னுசாமி, திருச்சி வனக்காவல் நிலைய வனச்சரக அலுவலா் ஜெ. நவீன்குமாா் தலைமையில்,

வனவா் என். மதன்ராஜ் மற்றும் வனத்துறையினா் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்விடத்துக்குச் சென்று மருத்துவக்குடி கிராம நிா்வாக அலுவலா் பி. கருப்புசாமி முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, ஆடுதுறை, எஸ்.எம்.எஸ். நகரைச் சோ்ந்த அ. முகம்மது முஸ்தபா (73) வீட்டில் உடும்பு தோல்களால் இசைக்கருவிகள் செய்வது தெரிய வந்தது. பின்னா், அங்கிருந்த பதப்படுத்தப்பட்ட உடும்பு தோல்களால் செய்யப்பட்ட 24 கஞ்சிரா இசைக் கருவிகள்,

சேதமடைந்த 200 உடும்பு தோல்கள், கத்திரிக்கப்பட்ட 63 உடும்பு தோல்களின் துண்டுகளைப் பறிமுதல் செய்தனா். மேலும், முகம்மது முஸ்தபாவை கைது செய்து, திருவிடைமருதூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.

Tags:    

Similar News