பாலியல் குற்றச்சாட்டு - அரசு பேருந்து நடத்துனருக்கு சிறை தண்டனை
பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு பேருந்து நடத்துனருக்கு 70 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பு;
By : King 24x7 Website
Update: 2023-12-13 17:53 GMT
பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு பேருந்து நடத்துனருக்கு 70 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பு
ஈரோடு மாவட்டத்தில் அரசு பேருந்தில் பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு பேருந்து நடத்துனர் சரவணனுக்கு 70 ஆண்டுகள் சிறையை தண்டனை 7 ஆண்டுகள் ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவு. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசு பேருந்து நடத்துனர் சரவணன்(49) பள்ளி மாணவிகள் தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்த தகவலின் பேரில் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஈரோடு மாவட்ட மகளீர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டது.இதில் பத்து சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை அடுத்து தல 7 ஆண்டுகள் வீதம் 70 ஆண்டுகள் சிறை தண்டனையை 7 ஆண்டுகள் ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.மேலும் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கினார்.