திருமணமான பெண்ணிடம் பாலியல் தொல்லை? பஞ்சாத்து தலைவரின் கணவர் கைது:

திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை? கரியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அதிரடி கைது:

Update: 2023-12-17 17:37 GMT

திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை? கரியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அதிரடி கைது:

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள கரியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் செல்வி. இவரது கணவர் சீனிவாசன் (50). இவர் 22 வயது உள்ள திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கரியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பேயாளம்பட்டு பகுதியை சேர்ந்த 22 வயதுள்ள திருமணமான பெண்.இந்தப் பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. கரியமங்கலம் ஊராட்சியில் பணிதள பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கரியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள செல்வியின் கணவர் சீனிவாசன் பணித்தள பொறுப்பாளராக பணியாற்றி வந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். மேலும் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு உடந்தையாக அந்த பெண்ணின் கணவர், மாமனார், மாமியார் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மனோன்மணியிடம் நேற்று புகார் அளித்தார். இந்த புகார் குறித்து காவல் ஆய்வாளர் மனோன்மணி விசாரணை செய்து வந்த நிலையில் இன்று கரியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சீனிவாசனை கைது செய்தார். மேலும் பாதிப்புக்குள்ளான பெண்ணின் கணவர் ராமஜெயம்(29) மாமனார் பெருமாள்(49), மாமியார் பச்சையம்மாள்(40) ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரனை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News