5 டன் ரேசன் அரிசி கடத்தல் ,3 பேர் கைது – வாகனங்கள் பறிமுதல்
திருச்சியில் 5 டன் ரேசன் அரிசி கடத்திய 3 பேரை போலீஸார் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
. திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர்.சுஜாதா உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர் மணி மனோகரன் உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் காவலர்கள் ஸ்ரீரங்கம் அருகே இரவு ரோந்துப்பணியிலிருந்தபோது, திருவானைக்காவல் தாகூர் தெரு அருகே உள்ள செங்கல் சூளைஅருகே உள்ள முட்புதரில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் மண்ணச்சநல்லூரை சேர்ந்த தேவராஜ் மகன் லோகநாதன் (28), மேலகல்பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கோபிநாத் (29), திருச்சி பாலக்கரை அண்டகொண்டான் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மகன் பாலகுரு (29) என்று தெரியவந்தது. மேலும் அவர்கள் அருகில் உள்ள பின்னவாசல், உத்தமர்சீலி, திருவருட்சோலை ஆகிய இடங்களில் உள்ள பொதுமக்களிடம் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஏசுஇருதயராஜ் மகன் சுதாகர் என்பவரிடம் கொடுத்து அதிக லாபம் ஈட்டி உள்ளதாக தெரிய வந்தது. இதனையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 5000 கிலோ அரிசி மூட்டைகள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தலைமறைவான ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவரை தேடி வருகின்றனர்.