அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி.

Update: 2023-12-27 16:15 GMT

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி.

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே பரக்காணி பகுதியை சேர்ந்தவர் சஜி (29 ). இவர் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். தற்போது கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஊருக்கு வந்துள்ளார்.      கிறிஸ்மஸ் பண்டிகையன்று இரவில்  இவரது நண்பர் அனு(27) என்பவருக்கு சொந்தமான பைக்கில் இவர் பின்னால் இருந்து கருங்கல், பாலப்பள்ளம் பகுதியில் உள்ள கிறிஸ்மஸ் குடில்களை பார்க்க தேங்காப்பட்டணம் வழியாக  சென்றுள்ளனர்.  பைக் நெடுந்தட்டு என்ற பகுதியில் செல்லும் போது, இவர்கள் ஓட்டி சென்றபைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இவர்கள் கீழே  விழுந்துள்ளனர்.       படுகாயமடைந்த இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு,  ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கே பரிசோதித்த டாக்டர் சஜி ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறியுள்ளார்.      படுகாயம் அடைந்த அனு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சஜி யின் தந்தை சாது என்பவர்  கொடுத்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து இவரது பைக் மீது மோதிய வாகனத்தை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News