கோவில்பட்டியை கலங்கவைத்த சம்பவம்: நேற்றுக் காணாமல்போன சிறுவன் கருப்பசாமி இன்று சடலமாக மீட்பு !
Update: 2024-12-10 09:23 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று மாயமான கருப்பசாமி என்ற 10 வயது சிறுவன் பக்கத்து வீட்டின் மாடியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளான். மேலும் பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த சிறுவன் மாயமானான், பல இடங்களிலும் தேடிக் கிடைக்காத நிலையில், இன்று காலை பக்கத்து வீட்டு மாடியில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது
சிறுவனின் கழுத்திலிருந்த ஒன்றரை சவரன் சங்கிலி மற்றும் ஒரு சவரன் மோதிரம் மாயமாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்