UP பெண்ணை கொலை செய்த காதலன் - வாலிபன் செய்த கொடூரம் !

Update: 2024-10-28 07:36 GMT
UP பெண்ணை கொலை செய்த காதலன் - வாலிபன் செய்த கொடூரம் !

The boyfriend who killed the UP girl

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள நங்லோய் என்ற பகுதியை சேர்ந்த இளம்பெண் சோனி (19). இவர் சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலம் ஆகும். அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அவர் சஞ்சு சலீம் என்பவரைக் காதலித்து வந்த நிலையில் இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களையும் அடிக்கடி சோனி தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அவருக்கு சோசியல் மீடியாவில் 6 ஆயிரம் பாலோவர்கள் உள்ளனர்.

சோனி காதலிப்பது குடும்பத்தினருக்குத் தெரிய வந்தது. அது யார் என்பது குறித்து கேட்டதற்குச் சோனி சொல்ல மறுத்து வந்திருக்கிறார். இந்நிலையில் சோனி கர்ப்பமாகியுள்ளார். இதனால் தன்னைத் திருமணம் செய்யும்படி சோனி, தனது காதலனை வற்புறுத்தினார். ஆனால் கர்ப்பத்தைக் கலைத்துவிடும்படி சலீம் அடிக்கடி சண்டையிட்டுள்ளார்.

இதில் சோனி கர்ப்பமாகி 7 மாதங்கள் ஆன நிலையில் கடந்த திங்கள் கிழமை சோனி சலீமை பார்க்கப் புறப்பட்டுச் சென்றுள்ளார். சலீம் வாடகைக்கு கார் ஏற்பாடு செய்து தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து சோனியை ஹரியானாவில் உள்ள ரோஹ்டக் என்ற இடத்திற்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு வழியில் அவரைக் கொலை செய்து அங்குள்ள வனப்பகுதியில் குழி தோண்டி புதைத்துவிட்டு வந்துவிட்டனர்.

சோனியைக் காணவில்லை என்று பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சோனியின் மொபைல் போன் விபரங்களை ஆய்வு செய்து சலீம் மற்றும் அவரது கூட்டாளி ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மற்றொருவர் தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடி வருகின்றனர்.சோனியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News